பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், சூசன் கானும் மீண்டும் திருமணம் செய்யக்கூடும்

  • 6 years ago
உலகின் அழகான நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், சூசன் கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகும் ரித்திக், சூசன் அடிக்கடி ஜோடியாக வெளியே செல்கிறார்கள். மகன்களுக்காக அடிக்கடி சந்தித்து பேசுவதாக சூசன் தெரிவித்துள்ளார். சூசனும், ரித்திக் ரோஷனும் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் மீண்டும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். சூசனும், ரித்திக் ரோஷனும் மகன்களுடன் தியேட்டர், ஹோட்டலுக்கு செல்வது, விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு செல்வதுமாக உள்ளதை பார்த்தவர்களுக்கு இவர்கள் மீண்டும் சேர்ந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரித்திக் ரோஷனும், சூசனும் குழந்தைகளுக்காக மட்டுமே சந்தித்து பேசுகிறார்கள். அவர்களுக்கு இடையே மீண்டும் காதல் இல்லை. அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என்று ரோஷன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Hrithik Roshan and his ex-wife Sussanne Khan share an amicable relationship with each other even after their divorce. The two have always said that their children are their first priority. The former couple has been spotted several times with each other and this has given rise to many speculations. An insider recently

Recommended