தனுஷுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்

  • 6 years ago
According to reports, Karthik Subbaraj is trying hard to bring Pierce Brosnan on board in his upcoming movie starring none other than Dhanush.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் முன்னாள் ஜேம்ஸ் பாண்டை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அந்த படத்தின் வேலை எதிர்பார்த்தது போன்று துவங்கவில்லை. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் பிரபலத்தை நடிக்க வைக்க விரும்புகிறார் கார்த்திக் சுப்புராஜ். ராபர்ட் டிநீரோ, அல் பசினோ ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான பியர்ஸ் பிராஸ்னை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் முறை கடினமாக உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் தற்போது லண்டன் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் நடத்த முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து படம் எடுக்க உள்ளார். மாமா, மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜை பார்த்து கோலிவுட் வியக்கிறது.

Recommended