மலேசியாவிலும் அரசியல் வேலை செய்த ரஜினி- வீடியோ

  • 6 years ago
நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக மலேசியா சென்றுள்ள திரைநட்சத்திரங்களுடன் நடிகர் ரஜினிகாந்தும் அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டேடியத்தில் அமர்ந்தவாறு ரஜினி தன்னுடைய செல்போனில் ரசிகர் மன்ற செயலியை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் இந்த கலைநிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படத் துறையினர் ஒரே விமானத்தில் புறப்பட்டு சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயமே அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கையோடு மலேசியா சென்றிருக்கும் ரஜினிகாந்த் தான். ரஜினி வெள்ளிக்கிழமையன்று தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடன் சேர்ந்து மலேசியா சென்றுள்ளார்.
ரஜினியுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் சக சினிமாத் துறையினர். ஒரு பக்கம் முன்னணி நட்சத்திரம், மற்றொரு பக்கம் அரசியல் தலைவராக உருவெடுக்கப் போகிறார் என்ற உற்சாகத்தில் ரஜினியுடன் செல்ஃபிகளை கிளிக்கித் தள்ளுகின்றனர் திரைத்துறையினர்.

Either Rajini is in Malaysia her thoughts are always with his political run, from Malaysia stadium he check out the Rajini Rasigar Madram app in his smart phone

Recommended