ரஜினி அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் ?- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் வலுவாக திராவிட அரசியல் வேரூன்றியுள்ள நிலையில், அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கும் நிலையில், ஆன்மீக அரசியலுக்கு அவசியம் என்ன வந்தது, இது யாருடைய கோஷம் என்பதை ரஜினிகாந்த் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதன் பின்னணியில் பாஜக உள்ளது என்பது பரவலாக எழுந்துள்ள விமர்சனம். இது பாஜகவின் பினாமி கட்சியாக இருக்கப் போகிறது என்று கடுமையான தாக்குதல் குரல்கள் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

நேரடியாக பாஜகவுடன் கூட்டணி போட்டால் ஆரம்பமே பெரும் சறுக்கலாக இருக்கும். இதனால் திராவிடக் கட்சிகளுக்கு முற்றுப் புள்ளி என்ற பெயரில் ரஜினியை பாஜக இறக்கி விட்டுள்ளதாக பேசப்படுகிறது.

இந்த விமர்சனங்களுக்கான பதிலை ரஜினிகாந்த்தான் அளிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளை ரஜினிகாந்த் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் எதிர்காலம் உள்ளது. திராவிடத்திற்கு எதிரான அரசியல் என்று நேரடியாக ரஜினிகாந்த் கூறாவிட்டாலும், ஆன்மீக அரசியல் என்று அவர் கூறியதன் மறைமுக பொருள் அதுதான். ஆன்மீக அரசியல் என்பது அரசியலில் ஆன்மீகத்தை இணைத்துக் கொண்டு செல்வது என்று அர்த்தம் வரும்.

Tamilnadu is one of the top states in terms of employment, public health, transport, roads, health and public development. With the Dravidian political roots in Tamilnadu, where the people enjoy the benefits from it, what is the needed for spiritual politics?rajini,politics,fans,entry,party

Recommended