அரசியல் பயணத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கினார் ரஜினி- வீடியோ

  • 6 years ago

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தினை பதிவு செய்வதற்காக புதிய இணையதளத்தை ஆப்களை துவக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த இருதினங்களுக்கு முன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் முன் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசுகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் ஆன்மீக அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்தார் ரஜினிகாந்த் தனது அரசியல் ஈடுபாடு குறித்து வெளியிட்ட அறிப்பையடுத்து அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும் ஒருசிலர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டும் வந்தனர், இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்கள் குறித்து கணக்கெடுத்தார். அப்போது பதிவு செய்யப்படாமல் இயங்கிவரும் மன்றத்தினை உடனே பதிவு செய்வதற்காக புதிய இணையதளத்தை துவங்க முடிவெடுத்தார். அதற்காக புதிய இணைய தள ஆப்களை உருவாக்கியுள்ளார். ரஜினி மன்றம் என்ற ஆண்ட்ராய்டு இணைய தள செயலிலோ அல்லதுWW.RAJINIMANDRAM.ORG என்ற வலைதள பக்கதிலோ தங்களின் மன்றத்தின் விபரங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர் வாக்காளர் அடையாள அட்டை இரண்டையும் இணையதள சேவையின் மூலம் பதிவு செய்து கொண்டு புதிதாக மன்றத்தின் உறுப்பினர் ஆகலாம் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் ஈடுபாட்டிற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Des : Actor Rajinikanth has launched a new website to register the unregistered fan club in Tamil Nadu.

Recommended