மோடிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க போகும் அண்ணா ஹசாரே- வீடியோ

  • 6 years ago
லோக்பால் மசோதா உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். இதுகுறித்து அன்னா ஹசாரே கூறுகையில் 'தற்போதைய பிரதமர் மோடி லோக்பால் மசோதாவை கண்டுகொள்ளவி்ல்லை என்றும் ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பொய் கூறிவருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தியும், ‛‛செய் அல்லது செத்துமடி '' என்பதற்கேற்ப வரும் 23ம் தேதி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்தது நான் இருவருமே சுயநலவாதிகள் என்று கூறியுள்ளார்.

Anna Hazare Slams Modi for his governance. He said that modi is continuously lying in the matter corruption less governance. And also he added that he will soon start his Fasting against him and for lokpal

Recommended