சாலை விபத்தில் டிஎஸ்பி உயிரிழப்பு- வீடியோ

  • 6 years ago

அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பளராக பணியாற்றி வருபவர் சண்முக சுந்தரம். இவர் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சொகுசு காரில் பயணம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் அரசம்பட்டு என்னும் இடத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த டிஎஸ்பி சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுனர் சுதாகர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Recommended