சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு- வீடியோ

  • 6 years ago
சபரிமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மேம்பாலத்தின் நடுவில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எஸ்ஐ உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலத்தில் காவல்துறையில் எஸ்ஐ ஆக பணியாற்றி வருபவர் ரகு. இவர் தனது நண்பர்களுடன் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றுள்ளார், சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பி கொண்டிருக்கும் போது மதுரை அருகே உள்ள நான்கு வழி சாலையில் உள்ள மேம்பாலத்தில் திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடுவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் மாணிக்கராஜ் ஆகியோர் தனது நண்பர்களுடன் கோவைக்கு சென்று விட்டு மாருதி வேனில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் வேனில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des : Four people died in SI, along with SI.

Recommended