801வது சிக்ஸ் அடித்து பட்டையைக் கிளப்பும் கிறிஸ் கெயில்....வீடியோ

  • 7 years ago
வங்கதேசத்தில் தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் கிறிஸ் கெயில் நேற்று நடந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வைரல் ஆகியுள்ளார்.

இந்த ஒரே போட்டியில் மட்டும் இவர் 18 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அதேபோல் இந்த போட்டியில் நிறைய சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இவர் பல டி-20 சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.

நேற்று இவர் ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மொத்த கிரிக்கெட் உலகமே மிரண்டு போய் இருக்கிறது. டிவிட்டர் உலகம் இவரை வாழ்த்து மழையால் நனைத்து வருகிறது.நேற்று நடந்த பங்களாதேஷ் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் 'ரங்பூர் ரைடர்ஸ்' அணியும் 'டாக்கா டைட்டன்ஸ்' அணியும் மோதியது. மிகவும் திரில்லாக சென்ற இந்த போட்டியில் ரங்பூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 18 சிக்ஸர்கள் அடித்தார். 69 பந்துகள் பிடித்த இவர் 146 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் இவர் 3 சிக்ஸர்கள் அடித்தார்.இந்த போட்டியின் மூலம் கெயில் 11,000 ரன்களை கடந்தார். டி-20 போட்டிகளில் 11,000 ஆயிரம் ரன்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. அதேபோல் இந்த போட்டியில் இவர் அடித்த 18 சிக்ஸர்கள்தான் டி-20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸ்கள். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கெயில் அடித்த 17 சிக்ஸ்கள்தான் இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதை அவரே முறியடித்துள்ளார்.



Chris Gayle hits his 801 six and creates new record. He hit 18 in single match against Dhaka Dyanmites in BPL which made him to create a new record.