கிரிக்கெட் ஆர்வலர் கருணாநிதி...இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!- வீடியோ
  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த விளையாட்டு ரசிகர், ஆர்வலர். குறிப்பாக கிரிக்கெட் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். அவர் கபில்தேவ் மற்றும் தோனியின் மிகப் பெரிய ரசிகராக இருந்துள்ளார் கருணாநிதி. சில நேரங்களில் இவர்கள் விளையாடுவதை பார்ப்பதற்காகவும், இந்திய அணியின் போட்டியை பார்க்கவும், தனது மற்ற வேலைகளை ஒத்திவைத்துள்ளார்.
Recommended