அனுஷ்க்காவிற்காக பாடல் பாடிய புது மாப்பிள்ளை கோஹ்லி- வீடியோ

  • 6 years ago
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அதன்படி திருமணம் முடிந்த பின் நடந்த சிறிய நிகழ்வு ஒன்றில் கோஹ்லி அனுஷ்காவிற்காக பாடல் ஒன்று பாடியுள்ளார். அவர் பாடல் பாடும் நிகழ்வை அவரது உறவினர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அவர் அழகாக பாடும் அந்த நிகழ்வில் அனுஷ்கா சர்மா அப்படியே பிரமிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

அனுஷ்கா சர்மாவும் கோஹ்லியும் கடந்த 2013ல் இருந்து தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் திருமணம் நேற்று இத்தாலியில் இருக்கும் மிலன் நகரில் நடைபெற்றது. இந்த விழா மிகவும் ரகசியமாக நடந்தது. மேலும் நெருங்கிய சொந்தங்களும், நண்பர்களும் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார்கள். எந்த கிரிக்கெட் வீரரும் இந்த திருமணத்திற்கு அழைக்கபடவில்லை .
இந்த நிலையில் இவர்கள் திருமண செய்தி இணையம் முழுக்க வைரல் ஆனது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களின் திருமணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்த வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கிறது.

India skipper Virat Kohli got married to Anushka Sharma in Italy. They shared the photos in their in Twitter handle. Kohli sings a song for his wife Anushka Sharma after marriage. He sings a song from Hindi movie Mr. X in Bombay

Recommended