அஜித்தை முந்திய சூர்யா... 'TSK' டீசர் சாதனை!..வீடியோ

  • 6 years ago
தமிழ்த் திரைப்படங்களின் டீசர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும், மிகப்பெரும் சாதனையை யூ-ட்யூபில் படைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 'விவேகம்', 'மெர்சல்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளன.
'விவேகம்' படம் உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்தது. அதற்கு முன் முதலிடத்தில் இருந்த 'ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' டீசரின் சாதனையை 'விவேகம்' டீசர் முறியடித்தது. அதன்பின் வெளிவந்த 'மெர்சல்' படத்தின் டீசர், 'விவேகம்' டீசரின் லைக்குகள் சாதனையை முறியடித்து, தற்போது 10 லட்சம் லைக்குகளுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. மெர்சல் டீசரின் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
தற்போது, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் 'விவேகம்' டீசரின் லைக்குகள் சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தச் சாதனையை 80 லட்சம் பார்வைகளுடன் புரிந்துள்ளது. இப்போது உலக அளவில் 'மெர்சல்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'விவேகம்' ஆகிய படங்களின் டீசர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.


Only in this year, 'Vivegam', 'Mersal' and 'Thaana serndha koottam' have created new achievements in you-tube records. 'Thaana serndha koottam' Teaser is currently in the second place with a break of the 'vivegam' Teaser's record. Now the world's top three teasers are followed by 'Mersal', 'TSK' and 'Vivegam'.

Recommended