ஒரே நோ-பாலில் வைரல் ஆன ஜடேஜா... டிவிட்டரில் பொங்கல் வைத்த ரசிகர்கள்!- வீடியோ

  • 7 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய கடைசி நாள் டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் நேற்று ஜடேஜா எடுத்த விக்கெட் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. அவர் நேற்று இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் விக்கெட்டை வெற்றிகரமாக எடுத்தார். அந்த விக்கெட்தான் தற்போது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. நேற்று அவர் தன்னுடைய பிறந்த நாளை வேறு கொண்டாடினார். அதையும் காரணமாக வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

நேற்று டெல்லியில் நடந்த இலங்கைக்கு எதிரான நான்காவது நாள் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா முக்கியமான விக்கெட் ஒன்றை எடுத்தார். இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ் விக்கெட்டை நேற்று ஜடேஜா எடுத்தார். ஆனால் அந்த விக்கெட்டில் சந்தேகம் இருந்த அம்பயர் ஒருமுறை மூன்றாவது அம்பயரிடம் சோதனை செய்தார். பின் மேத்யூஸுக்கு விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் அது பால் நோ-பால் ஆகும். இதை மூன்றாவது அம்பயர் கவனிக்காமல் போய்விட்டார்.
இந்த நிலையில் இதை வைத்து ஜடேஜாவை பலரும் கலாய்த்து வருகின்றனர். இவர் ''ஜடேஜா நினைச்சா நோ பால்ல கூட விக்கெட் எடுக்க முடியும்'' என்று கூறியிருக்கிறார்.

Jadeja became no-ball hero in test match against Sri Lanka. He takes Chandimal wicket in no-ball and twitter got fire after the wicket, since its his birthday

Recommended