அமிலம் அதிகம் இருக்கும் உணவுகள் எவை என்றால் நீங்கள் எவை என்று கூறுவீர்கள்? புளிப்பு சுவை அதிகம் உள்ள உணவுகள், அல்லது கசப்பு உள்ள உணவுகள் அமிலத்தன்மை கொண்டிருக்கும் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கும் என்று நினைப்பீர்கள். உங்கள் யூகம் தவறு. உணவு அடிப்படையின் வகையில் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ரசாயனங்களின் அடிப்படையில் மொத்தமாக வேறுபடுகிறது. நீங்கள் சாப்பிட்டபின் உடலுக்குள் நடக்கும் வேதிவினைகளின் படி அவை அதிக ஹைட்ரஜன் அணுக்களை உண்டாக்கும். உடலில் அதிக ஹைட்ரஜன் அணுக்கள் அதிகரித்தால் அவை அமிலத்தன்மைக்கு மாறிவிடும். இவ்வாறான உடலுக்குள் நடக்கும் மாற்றங்களால் அவை அதிக அமிலத்தன்மை உண்டாக்கி அசிடிட்டி உருவாக்குகிறது. எல்லா உணவுகளும் நல்லதுதான். ஆனால் உடலில் அமைப்பைப் பொறுத்து அவை நன்மையோ, தீமையோ தருகின்றது. அதிக சத்துள்ள சில உணவுகள் உடலுக்கு சில சமயம் பாதிப்பை தரும். அப்படி நீங்கள் அறிந்திடாத உடலில் அமிலத்தன்மையை உருவாக்கும் உணவுகள் எவையென பார்க்கலாம்