பணம் தராமல் நழுவும் தமிழக அரசு.. வழக்கு போடுகிறது நிசான் நிறுவனம்!- வீடியோ

  • 7 years ago
தமிழக அரசு வழங்க வேண்டிய 770 மில்லியன் டாலர் நிலுவை தொகையை கேட்டு சர்வதேச நடுவர் அமைப்பை நாடுகிறது ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிசான்.
போர்ட், ஹுண்டாய் போன்ற பல கார் நிறுவனங்கள் சென்னையை சுற்றிலும் ஒரு காலத்தில் அமைக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு தெற்காசியாவின் டெட்ராய்டு என்ற செல்லப் பெயர் கிடைத்தது.
அதேபோல 2008ல் நிசான் நிறுவனம், தனது சர்வதேச கார் தயாரிப்பு கூட்டு நிறுவனமான, பிரான்சின் ரெனால்ட்டுடன் இணைந்து, சென்னையில் கார் உற்பத்தி ஆலை அமைத்தது.இப்படி கார் உற்பத்தி ஆலை அமைத்தால் வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழி அடிப்படையில் ஆலை அமைக்கப்பட்டது. இங்கு $946 மில்லியன் செலவில் முதலீடு மேற்கொண்டது நிசான். ஆண்டுக்கு 4,80,000 கார்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக 2015ம் ஆண்டில் நிசானுக்கு ஊக்கத்தொகை கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அது தரப்படவில்லை.

இதுகுறித்து பல நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என நிசான் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அலுவலகத்திற்கும், இந்த நிகழ்வு குறித்து கடிதம் எழுதியுள்ள நிசான், தமிழக அரசு வாக்குறுதிப்படி சலுகைகள் தராததால் தங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், மோடி அலுவலகத்தில் இதுகுறித்து முறையிட்டும், பணம் கிடைப்பதாக தெரியவில்லை என்ற நிலையில், சர்வதேச நடுவர் அமைப்பில் இதுகுறித்து புகார் அளிக்கப்போவதாக நிசான் பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம், $770 மில்லியன் பணம் நிலுவையில் உள்ளதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Nissan Motor Co. Ltd has begun international arbitration against India to seek more than $770 million in a dispute over unpaid state incentives.

Recommended