கேரள மாணவி சேலத்திற்கு வருகை- வீடியோ

  • 7 years ago
காதல் திருமணம் செய்து கொண்ட சித்த மருத்துவ மாணவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு வரும் 11 மாதங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த அசோகன் என்பவரது மகள் அகிலா. இவர் சேலம் இளம்பிள்ளையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் மருத்தும் படித்து வருகிறார். சபீப்ஜகான் என்பவரை அகிலா காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அகிலா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதுடன் தனது பெயரை ஹதியா என்றும் மாற்றியுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு ஹதியாவின் தந்தை அசோகன் எதிர்ப்பு தெரிவித்து கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி திருமணத்தை ரத்து செய்ததுடன் ஹதியாவை பெற்றோருடன் செல்ல உத்தரவிட்டது. இந்நிலையில் பெற்றோர்களுடன் சென்ற தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும் படி சபீப்ஜகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் ஹதியாவை அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது ஹதியா தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் ஹதியாவை கணவருடன் செல்வதற்கு உத்தரவிட்டுள்ளதுடன் அவர் தொடர்ந்து மருத்துவம் படிப்பை தொடர கல்லூரி நிர்வாகம் ஒத்துழைப்பு அளிப்பதுடன் அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்பை பின்பற்றுவதாகவும் ஹதியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து ஹதியானா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்திற்கு அழைத்து வரப்பட்டார். இணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் ஹதியாவை கல்லூரிக்கு அழைத்து சென்று கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்பின் படி மாணவிக்கு 11மாதம் வரை 24 மணிநேரமும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் மாணவிக்கு காப்பாளராக இருப்பார் என்றும் இணை ஆணையர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

Recommended