கேரள மக்களுக்கு உதவிய குழந்தை- வீடியோ

  • 6 years ago
கேரள மாநிலத்தில் தொடர் கன மழையால், வெள்ளப் பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், 324 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த கே.சிவசண்முகநாதன் லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா என்ன செய்துள்ளார் என்பதை பார்க்கலாம்....

இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தானே சேமித்து தனது பிறந்தநாளான அடுத்த மாதம் 16 ஆம் தேதி சைக்கில் வாங்க முடிவு செய்த பிரியா கேரளத்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட செய்திகள் வந்ததைப் பார்த்து கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் LKG முதல் 4 ஆண்டுகளாக உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த ரூபாய் 8,246 கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு வழங்க முடிவு செய்ததுடன் தன் தந்தையிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவரின் முடிவை ஏற்று, உண்டியல் பணத்தை, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து பிரியாவும் அவரது பெற்றோர்களும் அனுப்பினர். பிஞ்சு குழந்தையின் நல்ல உள்ளத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன....

Des : In the state of Kerala, continuous heavy rains, floods and landslides have caused severe damage.

Recommended