ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கமல் ஆதரவு இவர்களுக்கா?- வீடியோ

  • 7 years ago
ஆர்.கே.நகரில் நடிகர் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு என்பது ரசிகர்கள் கேள்வியாக உள்ளது. பாரதியார் போல முண்டாசு கட்டிக்கொண்டு டிவிட்டரில் டி.பி. வைத்தபடி அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார் கமல்ஹாசன். இதை சீரியசாக எடுத்து, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழிசை போன்ற கட்சி தலைவர்கள் கருத்து கூறியபடி உள்ளனர். இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ள கமல் ஆர்.கே.நகரில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்?

தனிக்கட்சி துவங்கப்போகிறேன் என்று அறிவித்துள்ளார் கமல். எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக உள்ளார் கமல். முதல்வர் பிரனாயி விஜயனை அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளார்.

எனவே ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டால் அதற்கு கமல் ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும், திரினாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் நட்பு பாராட்டினாலும், அவ்விரு கட்சிகளும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது சந்தேகம். எனவே கமல் சாய்ஸ் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்கலாம்.

To whom Kamal Hassan going to extend his support in RK nagar election, fans are eager to know his decision.

Recommended