ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...

  • 6 years ago
ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. எல்லா சாலைகளும் ராணி மேரிக்கல்லூரியை நோக்கி உள்ளன. காரணம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இங்குதான் எண்ணப்படுகின்றன. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் கூட இவ்வளவு பரபரப்பு இல்லை. காரணம் அவர்தான் ஜெயிப்பார் என்பது உறுதியாக தெரியும். வாக்கு வித்தியாசம்தான் ஆளுங்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தும். இந்தமுறை அப்படியில்லை. ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். இதில் வெற்றி ஆளுங்கட்சிக்கா, எதிர்கட்சிக்கா? அல்லது சுயேட்சைக்கா என்பதுதான் பரபரப்பையும் பதற்றத்தையும் பற்றவைத்துள்ளது.

வாக்குப்பதிவு நடந்து 3 நாட்களுக்குப் பின்னர் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 3 நாட்களும் பலர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். டி டே என்பது போல தீர்ப்பு நாளும் வந்து விட்டது. காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரிக்கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுபாட்டு அறையில் இருந்து வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்யும் வீடியோகிரபர் உள்ளிட்டோர் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

The counting of votes for the R K Nagar bypoll begin on today and the results are expected to be out by afternoon.

Recommended