தாவூத் இப்ராஹிம் மகன் பாகிஸ்தானில் என்ன செய்கிறார் தெரியுமா?- வீடியோ

  • 7 years ago
நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் மகன் மொயின், கராச்சி நகரிலுள்ள மசூதியில் மவுலானாவாக செயல்பட்டுவருகிறார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, இந்தியாவால் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மகன் மொயின், கராச்சியிலுள்ள மசூதியொன்றில் மவுலானாவாக பணியாற்றுகிறார். தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.

மிரட்டல் வழக்கில் பிடிபட்ட இக்பால் விசாரணையின்போது காவல்துறையினரிடம் இந்த புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம் போல அவரது மகன் இல்லை என அவர் கூறியுள்ளார்.
தனது தந்தையை போல நிழலுலக தொழில்களில் ஈடுபடாமல், மொயின் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு, மவுலாவாக பணியாற்றுவதாகவும், குர்ஆனை முழுமையாக மனப்பாடம் போல ஓதியுள்ளதாகவும், இக்பால் தெரிவித்துள்ளார்.

Dawood Ibrahim’s son Moin has become a maulana at Masjid in Karachi. This was revealed by Dawood’s brother Iqbal Kaskar who was arrested recently in an extortion case. He does not endorse his father’s business. He is very religious and has memorised the Quran. He recently became a maulana at a masjid in Karachi, Iqbal also told his interrogators

Recommended