'தாமிரபரணி' நடிகை பானு என்ன செய்கிறார் தெரியுமா?

  • 6 years ago
'தாமிரபரணி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பானு. அந்தப் படத்தின் மூலம் நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார். அதன் பிறகு 'அழகர்மலை', 'மூன்றுபேர் மூன்று காதல்' என இவர் நடித்த சில படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வந்தார். தற்போதும் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வரும் பானு, கொச்சியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். குடும்ப வாழ்க்கையில் நுழைய விரும்பிய இவருக்கு, கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மலையாள சினிமாவில் பாடகியும், தொகுப்பாளினியுமான ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியைத்தான் பாணு திருமணம் செய்துகொண்டார். பியூட்டி சலூன் பாணு பயிற்சி பெற்ற கிளாசிக் டான்சரும் கூட. பல மேடைகளில் ஆடிப் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். பானு சொந்தமாக பலரிவோட்டம் எனும் இடத்தில் அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் இந்த பிஸினஸில் தான் கவனம் செலுத்துகிறாராம்.

Actress Bhanu acted as heroine in Vishal's 'Thaamirabharani'. Later, he had acted in Malayalam films because he did not succeed in some of tamil films. She was maarried and has a cute baby. Currently, Bhanu managing a beauty saloon in kerala.

Recommended