நம்ம "லட்சுமி" கமலா மாறி நிற்பதைப் பாருங்க!..வீடியோ

  • 6 years ago
சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகியிருக்கும் லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி பிரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் அவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகையாம். கமலின் பிறந்தநாளன்று அவருடைய கெட்டப்புகளை போட்டு தானும் அசத்தி டுவிட்டரில் டக்கரான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் சலிப்பான வாழ்வில் ஒரு நாள் வேறொரு ஆடவனுடன் நெருங்கிப் பழகும் சூழ்நிலையே 'லட்சுமி' குறும்படம். சமூக வலைதளத்தில் கடுமையான விவாதப் பொருளான இந்த குறும்படத்தால் உலக அளவில் புகழ் பெற்ற விட்டார் குறும்பட நாயகி லட்சுமி பிரியா.சென்னைப் பெண்ணாண லட்சுமி பிரியா, கிரிக்கெட்டிலும் அலாதி பிரியம் கொண்டவராம். இவர் தல டோணியின் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகை மட்டுமல்ல சிறந்த விளையாட்டு வீரரும் கூடவாம். லட்சுமி கதாபாத்திரமாக வாழ்ந்து திடமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் லட்சுமிபிரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.லட்சுமி பிரியா புகழின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது போல அவர் யாருடைய தீவிர ரசிகை என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளிற்காக அவர் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.துரோணாச்சாரியாருக்கு அவரின் ஏகலைவன்களில் ஒருவரது சமர்ப்பணம் என்று அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார் லட்சுமி பிரியா. கமல்ஹாசனின் அன்பே சிவம் கெட்டப்பில் தொடங்கி பல திரைப்படங்களை வரிசைப்படுத்தி அந்த தோற்றத்திற்கு ஏற்ப தானும் மேக்கப் போட்டு இரண்டு படங்களையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் லட்சுமி பிரியா.

Actress Lakshmipriya chandramouli grabbs attention of people from Lakshmi shortfilm and another news also came into light that she is a diehard fan of Kamalhaasan and she dedicated a special video to him on his birthday.

Recommended