வேலைக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு?- வீடியோ

  • 7 years ago
சனீஸ்வர பகவானும் வேலை வாய்ப்பும் எனும் தலைப்பில் எப்போது வேலை கிடைக்கும், வேலை மாற்றம், வேலையிழக்க காரணங்கள் பற்றி ஜோதிட கருத்தரங்கத்தில் ஜோதிடர்கள் எடுத்துக்கூறினர். புகழ் பெற்ற கோட்டை மாநகரும் தெய்வத்திரு கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்த ஊருமான வேலூரில் நேற்று வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் ஜோதிட கருத்தரங்கம் கடந்த ஞாயிரன்று நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் கருத்தரங்கத்தில் கலந்துக்கொண்டார்கள். மேலும் பல ஜோதிடர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

மதியம் இரண்டுமணியளவில் மகளிர் ஜோதிடர் சுமித்ரா குத்துவிளக்கேற்றியதை தொடர்ந்து இறைவணக்கத்துடன் கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. அதனை தொடர்ந்து சங்க செயலாளர் சிவலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

வரவேற்புரையை தொடர்ந்து ஜோதிடர்கள் உரையாற்றினார்கள். முதலில் சென்னையை சேர்ந்த பிரபல ஜோதிடரான பன்ருட்டி தினேஷ் "ஜிகேவின் சந்திரநாடி அனுபவங்கள்" எனும் தலைப்பில் தனது சந்திரநாடி அனுபவங்களை பகிர்ந்து சிறப்புரையாற்றினார். அவர் தனது கணீர் குரலால் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vellore Astrology Research Association used to conduct periodical astrological conference at Vellore and other places. This year annual conference conducted at Vellore on 19/11/2017 and various astrologers delivered their speeches on astrology.

Recommended