நடுரோட்டில் தீப்பிடித்த நிலையில் அறுந்து விழுந்த மின்சார ஒயர்

  • 7 years ago
சென்னையை அடுத்த ஆவடி சாலையில் கொட்டும் மழையில் நடுரோட்டில் மின்சார ஒயர் தீப்பிடித்த நிலையில் அறுந்து விழுந்தது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னையை பதம் பார்க்கும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. திரும்பிய திசையெங்கும் மழைவெள்ளம்.. புறநகர்கள் வெள்ளக்காடாகி மிதக்கின்றன.பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது சென்னையை அடுத்த ஆவடியில் டிரான்ஸ்பர் ஒன்றில் தீ பிடித்த மின்சார ஒயர் அப்படியே நடுசாலையில் மழைநீருக்கு நடுவே பற்றி எரிகிறது. இது தொடர்பாக உடனடியாக மின்சாரவாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

Recommended