இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்... | weekly news | TAMILNEWS
  • 9 months ago
செந்தில் பாலாஜி கைது சரியே - காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது; மூன்றாவது நீதிபதி தீர்ப்பு!
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
ஜூலை 14-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். பலமுறை சம்மன் அனுப்பி, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரிலும், ஆடிட்டர் மூலமாகவும் ஆஜராகியிருக்கிறார். அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை எதிர்த்து அவர் வழக்கு தொடரவில்லை. இவரது கைது குறித்து அவரது சகோதரர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது" என்று தீர்ப்பளித்தார்.
Recommended