இப்ப என்னால அதுகளுக்கு தீனி வைக்க முடியல! - பறவைகளுக்காக பரிதாபப்படும் கேமரா காதலன்

  • last year
சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சி.சேகர். கேமரா பழுதுநீக்குநரான இவர் பாரம்பரிய பழைய கேமராக்களை சேகரித்து வந்துள்ளார். இவர் தன் வீடு முன்பு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளுக்கு உணவளித்து வந்தார். தற்போது அந்த வீடு விற்பனைக்கு வருவதால், இவர் வெளியேற்றப்பட்டார். இவரைத் தேடி வரும் பறவைகளுக்கு உணவளிக்க முடியவில்லையே என வருந்துகிறார்.