முரசொலி மூலம் மார்க்சிஸ்ட்களுக்கு குட்டுவைத்த திமுக!

  • last year
சென்னை கோயம்பேட்டியில் நடந்த மே தின பொதுக் கூட்டத்தில் தமிழக அரசை அதிகாரிகள் தவறாக நடத்துக்கிறார்கள், தொழிலாளர் திருத்தச் சட்டமசோதாவை தயாரித்த அதிகாரிகளை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து பேசினார். இந்த பேச்சு திமுக கூட்டணியில் பேசு பொருளாகியுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் டி.கே.ரங்கராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ‘’ திமுக அரசை அதிகாரிகள் தான் வழி நடத்துக்கிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே. ரங்கராஜனுக்கு சொன்னது யார்? எதை வைத்து இதை அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார் என்பதனை அவர் சொல்ல வேண்டும்.

பொத்தாம் பொதுவாக நாலாந்தரப் பேச்சாளர் போல பேசுவது தான் கூட்டணி தர்மமா? தவறான குற்றச்சாட்டை கூட்டணி கட்சியான சிபிஎம் தங்களது அதிகாரப்பூர்வமான நாளேடில் தலைப்பு செய்தியாக வெளியிடலாமா? எத்தனை வன்மை டி.கே.ரங்கராஜனுக்கு இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பார்.

தமிழ்நாடு சிபிஎம் கட்சியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் என்பதே நமது சந்தேகம். சமீபத்தில் கலைஞரைக் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டார்கள். இவர்கள் யாருடைய குரலாக பேசுகிறார்கள் என்பதே நமது கேள்வி. மேலும் திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், என்று சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ டி.கே.ரங்கராஜன் போன்றவர்களுக்கு இல்லை’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#tkrengarajan #dmk #cpim #cpm #tkrengarajan #murasoli #Theekkathir #12hourswork #labourlaw #mkstalin #தீக்கதிர்


Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended