இதுக்குமா போட்டோ ஷூட் நடத்துவாங்க?

  • last year
நமது சமூகவெளியில் பொதுவாக விவாகரத்து என்பது பெண்களின் மீதான குற்றச்சாட்டாகவே தொடுக்கப்படுகிறது. அதன் பின்னரான தனிப்பட்ட நபர்களின் வேதனைகளை, அவற்றிலிருந்து விடுபட முயற்சிக்கும் அவர்களின் தவிப்புகளை, போராட்டங்களை எவரும் செவிமெடுப்பதில்லை. அப்படியான சமூகப் பார்வைக்கு சம்மட்டி அடி கொடுக்க முடிவு செய்தார் ஷாலினி. அவரைப் பொறுத்தவரை விவாகரத்து என்பது அவரது தனிப்பட்ட வாழ்வின் மிகப்பெரும் விடுதலை. எனவே அதனை கொண்டாட முடிவு செய்தார்.

எனவே, இதர வைபவங்களுக்கு இணையாக தனது விவாகரத்து நிகழ்வை ஃபோட்டோ ஷூட் எடுத்தவர், அதனை இன்ஸ்டாவில் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார். முன்னாள் கணவருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை கிழிப்பது போலவும், விவாகரத்து என எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்களை தோரணமாக கொண்டும், தன்னம்பிக்கை தெறிக்க போஸ் கொடுத்தபடியும் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார்.

ஷாலினி செய்தது சரியா என்ற கேள்வியை முன்வைத்து, பொதுவெளியில் உடனடியாக அதிர்வலைகளை அவை ஏற்படுத்தின. அதன் பின்னரான நாட்கள் கடந்த பிறகு ஷாலினியின் பதிவுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended