ஆராட்டு விழாவுக்காக பம்பைக்குப் புறப்பட்டார் ஐயப்பன்!

  • last year
பம்பையில் ஆராட்டு நிகழ்வுக்காக சபரிமலையிலிருந்து உற்சவரான தர்ம சாஸ்தா ஐயப்பன் இன்று காலை 9 மணிக்கு மலையிலிருந்து பம்பைக்குப் புறப்பட்டார்.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ஆராட்டு விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் நிறைவு நாளான இன்று காலை, உற்சவரான தர்ம சாஸ்தா ஐயப்பன் மலையிலிருந்து யானை மீது அமர்ந்து பம்பைக்குப் புறப்பட்டார்.
மதியம் சுமார் 12.30 மணியளவில் உற்சவர் மலையடிவாரம் செல்கிறார். அங்கே கன்னிமூல கணபதி சந்நிதியில் யானையிலிருந்து உற்சவர் கீழே இறக்கப்பட்டு அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு சபரிமலை மேல் சாந்தி உள்ளிட்டவர்கள் உற்சவரை பம்பைக்குத் தூக்கிச் செல்வார்கள். அங்கே தர்ம சாஸ்தாவுக்கு ஆராட்டு நடத்தப்பட்டு மீண்டும் கன்னிமூல கணபதி சந்நிதிக்கு புறப்படுவார். அங்கே சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும்.
இன்று மாலை 4 மணி வரை, சபரிமலை ஏறமுடியாத பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரின் தரிசனத்துக்காக உற்சவர் ஐயப்பன் கன்னிமூல கணபதி சந்நிதியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Recommended