மணிமேகலை விலகியது ஏன்..? - வெங்கடேஷ் பட் உருக்கம்!

  • last year
விஜய் டிவியில் பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை தெரிவித்து இருந்தார்.

அத்துடன் கோமாளியாக இத்தனை நாள் அனைவரும் காட்டிய அன்புக்கு நன்றி என்றும் தெரிவித்து இருந்தார். மணிமேகலை என்ன காரணத்திற்காக விலகுகிறேன் என்பதைத் தெரிவிக்காத நிலையில், செஃப் வெங்கடேஷ் பட் அவரது விலகலுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர், "லேடி கோமாளிகளிலேயே நீதான் சிறந்தவள். சிறந்த மனிதநேயம் கொண்டவள். இந்த நிகழ்ச்சியின் மூலம் என் வாழ்க்கையில் பல சிறந்த நல்ல தருணங்கள் உன்னுடன் எனக்கு கிடைத்தது. அதை என்றும் மறக்க மாட்டேன். ஆல் தி பெஸ்ட். நீ எந்தத் துறைக்கு போனாலும், என்ன வேலை செய்தாலும் சிறப்பாக இருப்பாய்" என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு மணிமேகலை, "செஃப் என்பதையும் தாண்டி எப்போதும் என் நலன் விரும்பி நீங்கள். உங்கள் வார்த்தைகளை அப்படியே பின்பற்றுவேன். நீங்கள் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர். உங்கள் வாழ்த்துக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

#manimegalai #chefbhat #CookuwithComali #காமதேனு
#kamadenu #காமதேனுதமிழ் #kamadenutamil

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/

Recommended