எடுத்த படத்தையே மீண்டும் எடுத்து ஜெயித்த விசு!

  • last year
சினிமாவில் எது வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். அதேபோல் எப்போது வேண்டுமானாலும் தோற்கலாம். முதல் படம் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும். இரண்டாவது படம் அதற்கு நேர்மாறாக இருக்கும். ஆனால், ஒரு படத்தை எடுத்துவிட்டு, அது படுதோல்வியாக இருக்க, அந்தக் கதையை மீண்டும் யாராவது எடுப்பார்களா? அப்படி எடுத்தால் அந்தப் படம் ஜெயிக்குமா? ‘என்னப்பா... அதே கதையை அப்படியே எடுத்திருக்காங்க’ என்று ரசிகர்கள் சொல்லமாட்டார்களா? இவை அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றதுதான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.
ரகுவரன், சந்திரசேகர், டெல்லிகணேஷ், கமலா காமேஷ், இளவரசி, திலீப் என பலரும் கதையை அடுத்தடுத்து நகர்த்த உதவினார்கள். கேப்டனைப் போல் கதையின் தூணாக விசு ‘அம்மையப்பன்’ எனும் கதாபாத்திரத்தில் கலக்கினார்.

அதிலும், க்ளைமேக்ஸ் காட்சியில் கோயிலில் காத்திருக்கும் விசுவிடம், லட்சுமி வந்து பேசுவது போலவும், பிறகு விசு வீட்டுக்கு வந்ததும் அதே லட்சுமி பேசுவது போலவும் சொல்லப்போனால், கோயிலில் பேசியதற்கு நேர்மாறாகப் பேசுவது போலவும் இருந்ததை, படப்பிடிப்புக்கு முதல் நாள் இரவில் மாற்றினார் விசு. கோயிலுக்கு வந்து பேசுவது வேலைக்கார கண்ணம்மா மனோரமா என்றும் வீட்டுக்கு வந்ததும் பேசுவது உமா கேரக்டரில் நடித்த லட்சுமி என்றும் தடக்கென மாற்றினார். ஹிட்டடித்தார்.


#kamadenu #காமதேனு #காமதேனுதமிழ் #kamadenutamil

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/