பேராசிரியர் வீ. அரசு (V. Arasu) என்பவர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆவார். தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கூர் என்னும் ஊரில் 15 பிப்ரவரி 1954 இல் பிறந்தவர். இவரது பெற்றோர் மா.வீராசாமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோர்கள் ஆவர். அவர்கள் இவருக்கு இட்ட பெயர் ராஜூ என்பதாகும். கல்விப்பின்புலம், ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆசிரியப் பணியில் 30 ஆண்டு அனுபவம், நவீனப்புனைவுகள், தனித்த ஆளுமைகள், அயலகத் தமிழ் இலக்கியங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட துறைகள், குறிப்பிடத்தக்க தனித்த ஆளுமைகளின் ஆக்கங்களை ஒட்டுமொத்தமாக கவனப்படுத்துதல் என்ற நிலைகளில் இவரது பங்களிப்பு அமைகிறது.