#karur #கரூர் சிவனாலயத்தில் நடைபெற்ற மாட்டு பொங்கல் நிகழ்ச்சி |

  • 2 years ago
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஆலயம், தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம் ஆகும், மிகவும் தொன்மையும், வரலாறும் கொண்ட இந்த ஆலயத்தில் கோ சாலை உள்ளது, இதில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆலய நிர்வாகத்தின் சார்பில், பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மாட்டுபொங்கல் விழாவினையொட்டி, இங்குள்ள மாடுகளுக்கு பொங்கல் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஆலய அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக வேதங்கள் முழங்க, சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர். கொரோனா விதிகளை பின்பற்றியதையடுத்து, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கோயில்கள் திறக்க அனுமதி இல்லை என்பதினால் பூட்டப்பட்ட ஆலயத்தின் வெளிப்பகுதிகளில் பக்தர்கள் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். முன்னதாக மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை குளிப்பாட்டி, அதனை அலங்கரித்து புதிய கயிறுகள், மூக்கணாங்கயிறுகள் கட்டி, மாட்டின் உடலில் வர்ணம் பூசி மாடுகளை அலங்கரித்து மாட்டு பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்பதினால் வழிபாட்டில், சிவன் ஆலய அர்ச்சகர்கள், ஓதுவார் மற்றும் ஆலய பணியாளர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கடவுள் அருள் பெற்றனர்.

Recommended