#DotCom_Tamil #திருப்பதி: ஏழுமலையானை வழிபட்டார் இலங்கை பிரதமர் ராஜபக்சே |

  • 2 years ago
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருப்பதிக்கு வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். இலங்கை பிரதமர் ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக மனைவியுடன் நேற்று மதியம் திருப்பதிக்கு வந்தார். திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர்கள் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு ஆசி வழங்கினர். இன்று மாலை வரை திருப்பதி மலையில் தங்கியிருக்கும் அவர் 5 மணிக்கு திருப்பதி மலையில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்கிறார்.

#Pls Visit my websites
#newzbuz.in
#dottamil.com
#karurboomi.com

Recommended