#chithiraitv #பொய் கேஷ் போடுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு போலீஸ் நல்லது செய்ய வேண்டும் - முன்னாள் அமைச்சர் MRV |
  • 2 years ago
கரூர் மாநகராட்சி வெங்கமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், தனியார் பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வருகை தந்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபஸ்கர்,
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது ஆய்வாளர் கண்ணதாசன் உறவினர்களை தாக்கியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவியின் தாய் உட்பட உறவினர்களை இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளைப் போல காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும். பொய் வழக்குகள் போடுவதை காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும். போலீசார் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அம்மா அரசு பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. புகார் அளிக்கச் சென்றவர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறிபிருக்கிறார். புகார் அளிக்க வந்தவர்களை தாக்கியுள்ளார் ஆய்வாளர், இது தான் போலீசாரின் லட்சனமா ? ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை வைத்திருக்கிறார்கள் என்றார்
Recommended