#BOOMINEWS | புதுக்கோட்டை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் கழிவுகள் தீர்வு கண்ட கலெக்டர் |

  • 3 years ago
புதுக்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் மனிதக் கழிவு கொட்டப்பட்டு வந்ததால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப மக்கள் பாதிப்பு - கண்மாயை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்றும், சம்பந்தப்பட்ட கண்மாயை 7 கோடி ரூபாய் மதிப்பில் புணரமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்...

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள ஒட்டக்குளம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாயை சுற்றி நியூ டைமன்ட், சண்முகா நகர் லட்சுமி நகர், மறைமலைநகர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்தப் பாசன கண்மாய் பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் சாக்கடை நீரை பயன்படுத்தி சிலர் பல ஆண்டுகளாக மீன்பிடித்து வந்த நிலையில் தற்போது இந்த கண்மாயில் மனிதக் கழிவுகளும் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அம்மக்களின் வேதனை குறித்தும் பாரம்பரியமிக்க கண்மாயில் மனிதக் கழிவுகள் கொட்டப்படும் அவலத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து சம்பந்தப்பட்ட கண்மாயை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,மனிதக் கழிவுகள் அங்கு கொட்டப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தவும் பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை கழிவுநீர்க் குழாயை சரி செய்யவும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் மனிதக் கழிவுகளை வழக்கமாக கொட்டும் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கண்மாயில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் கொட்டி உள்ளதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட கண்மாயை பொதுப்பணித்துறை சார்பில் ஏழு கோடி மதிப்பீட்டில் புனரமைக்க திட்டம் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

Recommended