#BOOMINEWS | அரசு ஊழியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரி மக்கள் ஆர்ப்பாட்டம் |

  • 3 years ago
ஆரணி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினரின் கணவரை தாக்கிய அரசு ஊழியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கிராமமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சார்ந்த சூரியகலாசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார் அதேபோல் சிறுமூர் கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த அனிதா செல்வராஜ் பதவி வகித்து வருகிறார். நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாசுந்தரம் என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவரின் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக மேகநாதன் ஆரணியில் இருந்து உறவினர்களன ஆரணி அரசு பணிமனையில் ஓட்டுனராக பணிபுரியும் தரணி என்பவரின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஆட்டோ மற்றும் கார் மூலம் சிறுமூர் கிராமத்திற்க்கு வந்து ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா அவரது கணவர் சுந்தரம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் அனிதா மற்றும் அனிதாவின் கணவர் செல்வராஜ் ஆகியோரை மேகநாதனின் ஆதரவாளர்கள் கத்தி மற்றும் வேல் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சுந்தரம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினரின் அனிதாவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் ஆனால் இந்த வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமூர் கிராம பொதுமக்கள் சிறுமூர் கிராமத்துக்குள் ஆட்டோ மற்றும் காரில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் கத்தி மற்றும் வேல்கம்பு எடுத்து வந்து தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் இன் குடும்பத்தை தாக்கியதை கண்டித்து உடனடியாக அவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Recommended