#BOOMINEWS | கரூர் நாயக்கர் சமூக குடிபாட்டு கோயில் முன்பு அத்துமீறி கொடிக்கம்பம் நட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு |

  • 3 years ago
கரூர் அருகே வெங்கக்கல்பட்டி பகுதியில் நாயக்கர் சமுதாய வழிபாட்டு கோயில் முன்பு தமிழ்ப்புலிகள் கொடிக்கம்பம் திடீரென்று அமைத்ததால் நாயக்கர் சமுதாயம் எதிர்ப்பு – இதை கேட்க சென்றவர்கள் மீது வன்கொடுமை சட்டம் ? போடுவதாக நாயக்கர் சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

கரூர் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி பகுதியில் உள்ள பொம்முசாமி கோயில் ஆனது காலம், காலமாக நாயக்கர் சமூகத்தினர் குல தெய்வமாக விளங்கி வரும் நிலையில், அந்த பகுதியில் வழிபாடுகளும் வருடா வருடம் நடத்தப்படும்,. இந்நிலையில், கொரோனா காரணத்தினால் குலதெய்வம் கோயில்களில் வழிபாடு ஆகியவைகள் நடத்த தடை விதித்ததையடுத்து. இங்குள்ள பிற சமுதாய அமைப்பினர், கோயில் முன்பே தமிழ்ப்புலிகள் என்கின்ற அமைப்பின் கொடியினை நட்டுள்ளனர். கோயில் இருக்கும் இட்த்தில் எதற்கு கொடிக்கம்பம் என்று கூறியதற்கு அது எங்கள் உரிமை என்றும், எங்கு வேண்டுமானாலும் எங்களது கொடியை ஏற்றுவோம் என்றும், மீறி பேசினால் உன் மீதும், உங்கள் சமூகத்தினர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடுவோம் என்றும் மிரட்டியதோடு, அவ்வப்போது இந்த நாயக்கர் சமுதாய மக்களை பிற அமைப்புகளும் மிரட்டி வருவதாகவும், உரிய நீதி வழங்க வேண்டுமென்றும் கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, நாயக்கர் சமுதாய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோயில்களின் வழிபாட்டு தலத்தில் அமைப்பு கொடியேற்றியவர்கள் மீதும், ஆங்காங்கே இதே போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பேட்டி : கோ.நாகராஜ் – விடுதலைக்களம் – அனைத்து நாயக்கர் சமுதாய அமைப்பு – கரூர்

Recommended