#BOOMINEWS | 3 நாட்களில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி ஆணையயை வழங்கிய சார் ஆட்சியர் |

  • 3 years ago
3 நாட்களில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி முதியோர் உதவித் தொகைக்கான ஆணையயை வழங்கிய சார் ஆட்சியர்...


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகர் பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த16 ஆம் தேதி தாணிப்பாறை ராம்நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மலைவல் மக்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டுமென சிவகாசி சார் ஆட்சியர் பிரித்திவிராஜிடம் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் 3 நாட்களில் கோரிக்கையை பரிசீலனை செய்து 16 மலைவாழ் மக்களுக்கு இன்று முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை சிவகாசி சார் ஆட்சியர் பிரித்திவிராஜ் வழங்கினார். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றிய சார் ஆட்சியருக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Recommended