#BOOMINEWS | மன்னார்குடியில் கேயில்கள் மூடப்பட்டதால் வெட்டவெளியில் நடைபெற்ற திருமணம் |

  • 3 years ago
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் கூடுவதை கட்டுப்படுத்த வெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சாமி ஆலயத்தில் உள்ள செங்கமளத்தாயார் சன்னதியில் திருமணம் நிகழ்ச்சி நடத்திகொள்ள கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் இரண்டு திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கி கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருமணம் செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தவர்களை ஆலயத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என கூறி கோவில் நிர்வாகம் உள்ளே விட மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் செய்வதறியாது குழப்பம் அடைந்தனர் பின்னர் கோவில் வாசலிலேயே ஜமுக்காளம் விரிக்கப்பட்டு பெண்,மாப்பிள்ளையை அமர்த்தி கோவில் வாசலிலேயே திருமணம் நடத்தப்பட்டது. ஆலய நிருவாகம் ஆலயத்தின் உள்ளே திருமணம் நடத்த அனுமதி வழங்கி யும், கோவில் வாசலில் திருமணம் நடைபெற்றது.

Recommended