#BOOMINEWS | பாஜக தமிழ் மண்ணிற்கும் கலாச்சாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை காங்கிரஸ் MP அதிரடி |+

  • 3 years ago
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் பாஜகவை பொருத்தவரையில் தமிழ் மண்ணிற்கும் கலாச்சாரத்திற்க்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள் எனக் கூறிய மாணிக்கம் தாகூர். மேலும் கொரோனா மூன்றாம் அலைக்கு செல்லாமல் இருக்க தமிழக மக்கள் தங்களுக்கு தாங்களே பல்வேறு கட்டுபாடுகளுடன் வைத்துக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் எந்த ஒரு அரசியல் நிகழ்வும் இல்லாத நிலையில் பாஜக மக்கள் ஆசீர்வாத யாத்திரையை நிறைவேற்றி உள்ளது என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி வேல் யாத்திரையில் வெற்றி பெற்று எப்படி தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததோ அதே போன்று தான் மக்கள் ஆசிர்வாத யாத்திரையை பார்க்க வேண்டும் என்றார். யாத்திரை கலாச்சாரம் தமிழகத்தில் எடுபடாது என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் பாஜகவிற்கு பட்டியல் இனத்தின் மீது தீடீர் பாசம் வந்தது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது எனவும் பட்டியலின மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்காமல் பட்டியல் இனத்தை சேர்ந்த யாரோ 4 பேரை அமைச்சராக்கி பட்டியலின மக்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது எனக் காட்டிக் கொள்ளும் பாஜகவின் நாடகம் பலிக்காது என்றார். பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் வரும் வரியினால் இவர்கள் சம்பாதிக்கின்றனர். மத்திய அரசுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. 7 வருடத்தில் இவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் பொய்க்கணக்கு கட்டுவதை நிர்மலா சீத்தாராமன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்தது போல் 32 ரூபாய் வரியை பழைய 9 ரூபாய்க்கு குறைக்க வேண்டும். பெட்ரோலில் 32 ரூபாய் வரியாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர்மன்மோகன் சிங் அரசில் இருந்தது போல் வரியை 9 ரூபாய் ஆக மாற்றுவதற்கு நிர்மலா சீதாராமனுக்கு திராணி இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். கமலஹாசனின் பேச்சு விஞ்ஞானிகளுக்கு மட்டுமே புரியும் அது உங்களுக்கு புரிந்தது மிக மகிழ்ச்சியான விஷயம். தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் இந்தியா முழுவதும் பார்க்கக்கூடிய பட்ஜெட்டாக மாறியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய அரசியல்வாதிகள் பாராட்டக்கூடிய பட்ஜெட்டாக தமிழக அரசின் பட்ஜெட் உள்ளது. எந்த மாநில அரசும் செய்யாத பெட்ரோல் டீசல் விலை குறைப்பை தமிழக அரசு செய்துள்ளது. இது ஒரு முற்போக்கு சிந்தனையான பட்ஜெட் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என பேசினார்.

Recommended