மோசடி மன்னன் மெட்டாஃப்...கற்றுத் தரும் பாடங்கள்!

  • 3 years ago
சதுரங்க வேட்டையின் படத்தில் கதாநாயகன் விதவிதமாக பொய் சொல்லி ஏமாற்றுவதைப் போல, தன் வாழ்க்கை முழுக்க ஏமாற்றுத் திட்டத்தை நடத்தி, 150 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் பெர்னார்ட் மெட்டாஃப். இவர் தனது 82-வது வயதில் சிறையிலேயே காலமானார்.

மோசடித் திட்டத்தை நடத்தியதன்மூலம் இவர் ஏமாற்றிய தொகை 65 பில்லியன் டாலர். (சுமார் 2,82,750 கோடி ரூபாய்) இந்த மோசடியை எப்படிச் செய்தார் மெட்டாஃப், இவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், அமெரிக்க உளவுத் துறை எப்படி இவரை எப்படிக் கைது செய்தது என்பதைப் பற்றி எல்லாம் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

மெட்டாஃப் போன்ற மோசடிப் பேர்வழிகள் நம் நாட்டிலும் இருக்கவே செய்கின்றனர். பி.ஏ.சி.எஸ்., சாரதா சிட்ஸ், மதுரை எம்.ஆர்.டி.டி, கோவை யு.டி.எஸ்., திருச்சி செந்தூர் ஃபின்கார்ப் என பல நிறுவனங்களிடம் நம் மக்கள் பல ஆயிரம் கோடிகளை இழந்துள்ளனர். இந்த மோசடி நிறுவனங்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளும் இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறார் நாணயம் விகடனின் இதழாசிரியர் ஏ.ஆர்.குமார்.


Bernard L. Medoff, father of the Ponzi scheme or Pyramid scheme, has passed away recently. He had run a fraudulent scheme which amounts 65 billion dollars. For this crime, Medoff got an unprecedented punishment of 150 years. He died at the age 82 while he was undergoing punishment.

How Medoff committed this crime, what was his background, who were the people who gave money to him, how the FBI arrested him - all these questions are answered in this video by Mr.A.R.Kumar, Joint Editor, Nanayam Vikatan.

People like Medoff are not only in the Western world, but also in India. PACL, Saradha Chits, Madurai's MRDT, Coimbatore UTS, ChendurFinCorp are all fraudulent schemes by which ordinary people lost many thousand crores. In this video elaborately explained how one should be careful before falling into these fraudulent schemes.

#BernardMedoff #Ponzi #Pyramid #NanayamVikatan #PACL, #SaradhaChits, #Madurai #MRDT, #Coimbatore #UTS, #ChendurFinCorp #Tiruchi