விஜய்யின் 'விலையில்லா விருந்தகம்...' இது விஜய்யின் சர்கார் - 2!

  • 4 years ago
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட ‘தலைவா - டைம் டு லீட்’ திரைப்படத்தை வெளியிடவிருந்த சமயத்தில், திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள், கதைகுறித்த வழக்கு என்று பல பிரச்னைகள் வந்தன. பிரச்னைக்கான முக்கியக் காரணம், ‘டைம் டு லீட்’ என்ற டைட்டில் வரிகள்தான். இந்த நிலையில், தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை மையமாக வைத்து, இந்தக் காலகட்டம்தான், ‘டைம் டு லீட்’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர். சமீபத்தில் இதுகுறித்து நடிகர் விஜய்யிடம் காஞ்சிபுரம் மாவட்டம், பனையூரில் ஆலோசனை நடத்திய மக்கள் இயக்கத்தினர், விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் குறித்த ஆபரேஷனுக்கு ‘சர்கார்-2’ எனப் பெயரிட்டு பணிகளை ஆரம்பித்திருக்கின்றனர்! #ThalapathyVijay #ActorVijay #HBDThyalapthyVijay #BIGIL