`உங்க பேர்ல இருக்கிற `ராதா'வை எடுத்துடுங்க சார்'! வலுக்கும் கண்டனங்கள்!

  • 4 years ago
`கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். இந்த விழாவில் பெண்கள் குறித்து அவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. நடிகை நயன்தாரா பேயாகவும் சீதையாகவும் நடிக்கிறார். இப்போ எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேடத்தில் நடிக்கலாம் என்று தொடர்ந்து சரச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது. பொதுவெளியில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.