ஆசிரியைகளை கைது செய்யவும் அரசே.. உங்க பணம் வேண்டாம்.. 4 மாணவிகளின் பெற்றோர் தடாலடி

  • 6 years ago
கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் அரசு வழங்கிய நிவாரண தொகையை ஏற்க மறுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் கடந்த 24-ந் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்
இந்த சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.இதில் மாணவிகள் அளித்த தகவலின்படி சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அண்மையில் அறிவித்தார். அதன்படி நிவாரண தொகையை வழங்குவதற்காக 4 மாணவிகளின் பெற்றோரை நெமிலி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டை சப்கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது மாணவிகளின் தற்கொலை குறித்து பெற்றோரிடம் சப்கலெக்டர் வேணு சேகரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு வழங்கிய 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை சப்கலெக்டர் அவர்களிடம் வழங்கினார்.

Parents of girls who committed suicide near in Vellore refused to take compensation. They urges to arrest the teachers.

Recommended