சபரிமலை பிரவேசம் நடந்தது எப்படி? வெளியான தகவல்!

  • 4 years ago
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகியோர் நேற்று அதிகாலை சபரிமலை சந்நிதானத்தில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். 45 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் சந்நிதானத்துக்குச் சென்றதால் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க. நேற்று முதலே போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சபரிமலை கர்ம சமிதி அமைப்பு சார்பில் கேரளத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

#Sabarimala #SabarimalaTemple #SabarimalaIssue