ஆஸ்கரே !!! ஏன் 'முத்துராமலிங்கம்' படத்திற்கு விருது தரல ?
  • 3 years ago
குங்குமப் பொட்டு, முறுக்கு மீசை, மடித்துகட்டிய வேட்டி எனச் சிலம்பம் மாஸ்டர் லுக்கிற்கு பக்காவாக செட் ஆகியிருக்கிறார் கௌதம் கார்த்திக். ஆனால், பேச்சு வழக்குதான் திருநெல்வேலி, மதுரை வழியாக தாராவி வரை போய்வருகிறது. சில வசனங்களை ‘அரே நிம்பல் இப்ப வசூலுக்குப் போறான்' என்கிற டோனில் பேசித் திகிலூட்டுகிறார். நெப்போலியனுக்கு இது ‘கம்பேக்' படம். இவரும் ஒரு சிலம்பம் மாஸ்டர் என்பதைக் காட்ட எல்லாக் காட்சியிலும் சிலம்பத்துடனே காட்சியளிக்கிறார். அதற்காக, காரில் ஏறினாலும் ‘கிளாடியேட்டர்’ ஹீரோ மாதிரி கையில் சிலம்பத்தைத் தூக்கி பிடிச்சுட்டு டிராவல் பண்றதெல்லாம் ஓவர் பாஸ்.

நிறையக் கிராமத்து கதாபாத்திரங்களிலேயே நடித்துவரும் விஜி சந்திரசேகர், ‘இந்த கேரக்டரில் கொஞ்சமாவது வித்தியாசம் காட்டலாம்' என முடிந்தளவு முயற்சித்திருக்கிறார். வில்லன் ஃபெப்சி விஜயன் இன்னொரு சிலம்பம் மாஸ்டர். அவ்வளவே. அவருக்கும் அந்த கண்டெயினர் லாரிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது மட்டும் கடைசிவரை புலப்படவேயில்லை. ப்ரியா ஆனந்த் திகட்டத் திகட்ட க்ளாமராக வருகிறார். ஒரு பாடல் காட்சியில் தயாரிப்பு தரப்பிலேயே 'டைல்ஸ் ப்ளர்' போட்டு மறைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். சிங்கம்புலியின் தூக்குச்சட்டி காமெடி குபீர் சிரிப்பு ரகம். விவேக்கும், செல் முருகனும் செய்தது காமெடி எனக் கீழே ‘ஸ்க்ரோலிங்’ போட்டிருக்கலாம்.
Recommended