• 8 years ago
மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபகத் பாசில், ரோபோ சங்கர், ஸ்நேகா உட்பட என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செம மாஸ் ஓப்பனிங்கோடு வெளியான 'வேலைக்காரன்' படம் வசூல் குவித்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான இந்தப் படத்தில் நயன்தாரா, ஃபகத் பாசில் போன்ற பிரபல மலையாள நட்சத்திரங்களும் நடித்திருப்பதால் கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வேலைக்காரன் வெளியிடப்பட்டது.
இந்தப் படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடப்பட்ட ஐந்து நாட்களில் ரூ. 35 கோடி வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன்பு வெளியான படங்களை விட இது அதிகமான வசூல்.
மேலும், இந்த படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தபோதும் தமிழகத்தில் திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் வேலைக்காரன் நல்ல வசூலை ஈட்டிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

ரஜினி, விஜய், அஜித் படங்களுக்குப் பிறகு இத்தனை குறுகிய நாட்களில் இவ்வளவு வசூல் வருவது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இதுவரை ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Sivakarthikeyan starred 'Velaikkaran' movie released on December 22nd. This film collected more than Rs. 35 crores in 5 days across TN and Kerala. 'Velaikkaran' is the highest box office collected movie lead by Sivakarthikeyan. Sivakarthikeyan has mass opening across tamilnadu after Rajinini, Vijay and Ajith.

Category

🗞
News

Recommended