ஆதரவை அதிகரிக்க ஓ.பி.எஸ் புதிய வியூகம்

  • 4 years ago
அ.தி.மு.க தரப்பில் இருந்து ஏழு எம்.எல்.ஏக்களை இழுத்துவிட்டாலே, பழனிசாமி ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியும்' என்பதால், அதற்கேற்ப வியூகங்களையும் வகுக்கத் தொடங்கியுள்ளனர் ஓ.பி.எஸ் அணியினர். " சட்டப் பேரவை கூடுவதற்கு முன்பு, சபாநாயகர் தனபாலிடம் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில், ' கூவத்தூர் தனியார் விடுதியில் வைத்து எம்.எல்.ஏக்களை நிர்பந்திப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை சுதந்திரமாக செயல்படவைக்கும் முடிவில் ஆளும்கட்சி இல்லை. அவர்களில் பலர் மிரட்டப்பட்டுள்ளனர்.