என் கேப்டென்சி எப்படி இருக்கும் தெரியுமா?.. புதிய வியூகம் வகுக்கும் ரோஹித் சர்மா- வீடியோ
  • 6 years ago
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லிக்கு பிசிசிஐ ஒருமாதம் ஓய்வு அளித்து இருக்கிறது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தற்போது ரோஹித் தன்னுடைய கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்று விளக்கி இருக்கிறார். மேலும் இலங்கைக்கு எதிரான தொடருக்கு எதிராக என்ன மாதிரியான திட்டங்களை வகுக்க இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு உள்ளது. கோஹ்லி சிறந்தவரா, ரோஹித் சிறந்தவரா என்ற விவாதம் நடக்கிறது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோஹ்லி தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். இந்த நிலையில் கோஹ்லி 1 மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முடிவாகியுள்ளது. இனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜனவரியில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடவே கோஹ்லி அணிக்கு திரும்புவார்.


The indian squad for one day series against Sri Lanka has been announced. Kohli will not lead the team, since he has rested from the match. Rohith Sharma will lead the one day series against Sri Lanka. New Indian captain Rohith explains about his captaincy
Recommended